ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்


ஓரிதழ் தாமைரை thagavalthalamடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை 
என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான
 ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே
 குறைவாக எடைபோடுகின்றனர்.
  முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப்
 பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல்,
தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், 
போன்றவையாகும்.
  ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு 
கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல்
 கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரியதாக
 இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை 
அளிக்காது! பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக 
மிக தவறான கருத்தாகும்.
  விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், 
விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். 
அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு 
செய்தியாகும்.
  துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். 
எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். 
விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு 
சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. 
இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்
  விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது 
கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும்
 நல்ல பலனை தரும்.
  ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் 
அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
 ஆண்மை பெருக த்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், 
முருங்கை கீரை அல்லலது, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். 
மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை 
தினந்தோறும் சாப்பிட்டுவரலாம். 

பயோ காஸ்பயோ காஸ் எரிவாயு கலன்


Pasumai Nayagan பசுமை நாயகன்

பயோ காஸ் எரிவாயு கலன் விற்பனைக்கு :


பலன்கள் : 
*ஒரே முறை மட்டும் முதலிடு.
*காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உறபத்தி செய்ய முடியும்.
*சிலின்டர் வாங்க தேவை இல்லை.
*பராமரிப்பு எளிது.
*குறைந்த இடத்தில நிறுவலாம்.
*துர்நாற்றம் வீசாது.
*3 மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை சமிக்க முடியும்.
*கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்சாலைகள் ஆகியவற்றிற்கு *தேவைக்கு ஏற்ற வகையில் அமைத்து தரப்படும்.
*இந்திய அரசின் MNRE ஆல் அங்கீகரிக்கப்பட்டது.
*இலவசமாக அமைத்து தரப்படும் 
*சர்வீஸ் செய்து தரப்படும்.
*20வது வருட கியாரண்டி உண்டு 
*அடுப்பு ,Hose ஆகியவை kit உடன் வழங்கப்படும்.
*70 % காஸ் 30 % கழிவு 
*கழிவை இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.

தொடர்புக்கு 
ராஜ ராஜன் .நீ 
+91 - 7200563961

பியர் வளர மயிர் வேண்டும்


மனிதத் தலைமுடி மற்றும் விலங்குகளின் முடிகள் 'கெராட்டீன்’ என்ற புரதத்தால் ஆனவை. இவற்றில் நைட்ரஜன் சத்தும் அதிகளவில் இருக்கிறது. இந்தச் சத்துக்கள் பயிர்களுக்கு நன்கு பயன்படும். ஆனால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களால், முடிகளை எளிதில் மட்க வைக்க முடியாது. இதனால், முடிகளை நொதிக்க வைத்து, திட மற்றும் திரவ உரமாக மாற்றும் வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார் மதுரை, சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன்.
''தலைமுடியை விளைநிலங்களில் பயன்படுத்தும்போது, மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, தாவரங்களின் வேர் பகுதிகளில் வெப்பநிலையும் சீராக்கப்படுகிறது. அதனால், தாவரங்கள் செழித்து வளர்கின்றன. தோல் தொழிற்சாலைகளில் சேதாரமாகும் தோல் முடிக்கழிவுகளில் இருந்துதான் தாவரங்களுக்கான உணவைத் தயாரித்திருக்கிறேன்.
இதில் தாவரங்களுக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் போன்ற சத்துக்களும், மாங்கனீஸ், மெக்னீசியம், இரும்பு, சல்பர்-குளோரைடு, போரன் மாலிப்பினம்... போன்ற நுண்சத்துக்களும் அதிகளவில் உள்ளன. இந்த உரத்தை... ஏலக்காய், திராட்சை, வாழை போன்ற பயிர்களில் பரிசோதித்ததில், நல்ல பலன்கள் தெரிந்தன. ரசாயனத்தால் உண்டான பாதிப்புகளையும் இவை குறைக்கின்றன'' என்கிறார் ராஜேந்திரன்.

உல்கின் இரண்டாவது மூல விதை சேகரிப்பு மையம்! இந்தியாவில்!

பசுமை நாயகன்  www.thagavalthalam.com

இந்த்யாவின் ஒரு பகுதி லே. இதன் அருகில் உள்ளது சங்க்லா டாப் என்னும் இடம். கடல் மட்டத்திலிருந்து 17000-ம் அடி உயரத்தில் உள்ளது.

இங்கு 5000 வகையான விதைவகைகளை இந்தியா சேகரித்து வைத்து உள்ளது.

100 முதல் 200 ஆண்டுகள் இந்த விதைகளைப் பத்திரமாகப் பாத்காக்க முடியும்

சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகளிருந்து விதைக்ள் நம்மிடம் இல்லாமற் போகும்போது, இந்த மூல விதை சேகரிப்பு மையத்திலிருந்து எடுத்துப் பன்படுத்த முடியும் என்று, டி.ஆஎ.டி.ஓ. செல்ல மூர்த்தி. சொல்லுகின்றார்.

மக்காச்சோளம் விளைச்சல்

கடுமையாக பாதிப்பு - அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
பசுமை நாயகன் Pasumai Nayagan

     பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் மக்காச்சோளம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்ந்து போன பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாக போட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
வானம் பார்த்த பூமியான பெரம்பலூர் மாவட்டத்தில் மானவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவைகள்தான் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. மக்காச்சோளம் பயிரிடுவதில் பெரம்பலூர் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதனால், பெரம்பலூர் மாவட்டம் மக்காச்சோளம் விளைச்சலில், மாநில அளவில் முதலிடம் பிடித்து வருகிறது. நடப்பாண்டில், சுமார் 46 ஆயிரத்து 54 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகள், தற்போதும் கடும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இதுவரை சரியான மழைப்பொழிவு இல்லாததால், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் முற்றிலும் காய்ந்து, சருகுப்போல் நிற்பதால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் ஏக்கர் ஒன்றிற்கு 6 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்காச்சோளம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சித்தூரில் காவல் ஆய்வாளர் லட்சுமணன் கடுமையாக தாக்கப்பட்டார்

Thagaval Pasumai Nayagan

      சித்தூரில் தீவிரவாதிகளுடனான மோதலில் படுகாயமடைந்த தமிழக சிறப்பு புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சித்தூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை பால்காரர் வேடமிட்டு திறக்க முயற்சித்த, காவல் ஆய்வாளர் லட்சுமணன் கடுமையாக தாக்கப்பட்டார்.அவரது தலையிலும், முதுகெலும்பிலும் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
    சித்தூரில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு லட்சுமணன் இன்று காலை 6.45 மணியளவில் கொண்டு வரப்பட்டார்.
    அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலையில் பலமாக அடிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லட்சுமணனை காப்பாற்றிய போது திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரும் காயமடைந்தார்.
காவல் ஆய்வாளர் லட்சுமணனின் மனைவி மது மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
                                                                         - வலசை விவேக்

ஆந்திர மாநில சித்தூர் அருகே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கைது

thagaval pasumai nayagan
   


     தமிழகத்தையொட்டிய ஆந்திர மாநில பகுதியான சித்தூர் அருகே வீட்டிற்குள் பதுங்கியிருந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய இரண்டு தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ சிசிக்சை அளிக்கப்பட உள்ளதால், அவர்கள் இருவரும் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

     சென்னையில் நேற்று பிடிபட்ட தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் அளித்த தகவலின்படி, சித்தூர் மாவட்டம் புத்தூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை காவல்துறையினர் இன்று காலை சோதனையிட முயன்றனர். ஆந்திர காவல்துறையினரின் உதவியுடன் தமிழக காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் இறங்கினர்.

      இன்று அதிகாலை 3 மணிக்கு அந்த வீட்டை திறக்க முயற்சித்த தமிழக காவல்துறையைச் சேர்ந்த 2 காவலர்களை, தீவிரவாதிகள் தாக்கினர். இதையடுத்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை இருமாநில காவல்துறையினரும் சுற்றி வளைத்தனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து தீவிரவாதிகளுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, வீட்டின் உள்ளே இருந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மீட்கப்பட்டனர். பின்னர் சரணடைந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    காவல்துறையினருடனான சண்டையின் போது பன்னா இஸ்மாயிலுக்கு வயிற்றில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் இருந்த துப்பாக்கி, ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
                                                                                                 - வலசை விவேக்

விழுப்புரம்,சென்னை,வேலூர்,நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு ஆசியர் கூட இல்லாமல் 16 அரசு பள்ளிகள்


School பள்ளிகள்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.                                


   கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
கல்வியின் வீரியம், கல்வியின் சிறப்பு, கல்வியின் பெருமை என கல்வியின் மகத்துவத்தை உணர்ந்த நாம் அறிவுக் கவிஞன் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இந்த பொன்னான வரிகளில் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது.
பொன், பொருள் அழியக் கூடும். ஆனால் கல்வி என்னும் செல்வம் காலத்தால் சாகாவரம் பெற்றவை என்பதற்கு மாற்று கருத்து கிடையாது. ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் கல்வியில் சாலச்சிறந்தவர் ஆக வேண்டும் என்பதே அனைவரின் கனவு,ஆசை, லட்சியமாக உள்ளது.
கல்வி  பலருக்கு உலகத்தை காட்டியுள்ளது. கல்வி பலரின் இருண்ட வாழ்கைக்கு கலங்கரை விளக்கமாய் உள்ளது. கல்வி எனும் சோலையில் கால் பதித்து தான் பெற்ற கல்வியால் தன் வாழ்க்கையில் வெற்றிக்கொடி கட்டி இவ்வுலகத்தால் அறியப்பெற்ற, போற்றப்பற்றவர்கள் எண்ணிக்கை அதிகமே...
ஒரு மனிதன் கல்வி கற்பதன் மூலம் தனி மனித முன்னேற்றத்திற்கு மட்டும் இன்றி அவன் வாழும் சமூகமும் அவன் பெற்ற கல்வியால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னேற்றம் அடைகிறது என்பது நான் அனைவரும் அறிந்ததே...
சாகாவரம் பெற்ற முத்தான கல்வியை முத்து முத்தாக மாணவ, மாணவிகளுக்கு தெளிந்த நீரோடையாக வழங்குவது ஒரு அரசின், ஒவ்வொரு ஆசிரியரின் பொறுப்பு.
தமிழகத்தில் மட்டும் ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர் நிலை பள்ளி என மொத்தம் 53722-க்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் இருப்பதாக புள்ளிவிபரம் காட்டுகிறது.
பொதுவாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கும் தரமான கல்வியை புகுட்டுவது அரசின் கடமை. இன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் கல்வி கடமையாக எடுத்து கற்பிக்கிறார்களா? அல்லது கடமைக்காக கற்ப்பிக்கப்படுகிறதா? என்ற கேள்வி நம் மனதில் தோன்றக் காரணம் ஆர்.எம்.எஸ்.ஏ என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்த அதிர்ச்சி  தகவல் தான்.
ஆம், “ஒரு ஆசிரியர் கூட இல்லாமல் தமிழகத்தில் 16 அரசு பள்ளிகள் செயல்படுவதாக” கணக்கெடுப்பில் கூறியுள்ளார்கள். இதன்படி விழுப்புரம்,சென்னை,வேலூர்,நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு ஆசியர் கூட இல்லாமல் 16 அரசு பள்ளிகள் இயங்கி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 195 பள்ளிகள் ஒரு ஆசிரியரை கொண்டு இயங்குகின்றன. அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 159 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 134 பள்ளிகளிலும், வேலூர் மாவட்டத்தில் 127 பள்ளிகளிலும் ஒரே ஒரு ஆசிரியர் இருக்கின்றனர்.
இது தவிர 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர். மாநிலம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உட்பட சுமார் 84 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக  ஆர்.எம்.எஸ்.ஏ என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பு நம் மனதில் வேதனையை அதிகரிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியரே இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த களையூர் பகுதியில் இயங்கி வரும் ஆரம்பப் பள்ளியில் தான், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலர் தங்களது தொடக்கக் கல்வியைப் பெற்றுள்ளனர்.
 School பள்ளிகள்
கடந்த 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வ.உ.சி ஆரம்பப்பள்ளி, அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு அரிய பொக்கிஷமாக திகழ்ந்த இந்தப் பள்ளி தற்போது மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் 50 மாணவர்கள் வந்துப் போகும் இந்த பள்ளியில் தற்போது பணியாற்றுவது ஒரு தற்காலிக ஆசிரியர் மட்டுமே.
மாவட்ட கல்வி நிர்வாகத்தால் மூன்று மாதங்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் வேறு பள்ளியில் இருந்து வரவழைக்கப்பட்டு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி நிலையற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.  முழுமையான கல்வி கிடைக்காத இந்தப் பள்ளி மாணவர்களுக்கு முறையான சத்துணவும் கிடைக்கவில்லை.
திறந்தவெளியே இவர்களுக்கான சமையற்கூடம், சுற்றுசுவரும் இல்லை,பள்ளிக்கு மேற்கூரையும் இல்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டின் முடிவிலும் தமிழகத்திலேயே விழுப்புரம் மாவட்டம் தான் கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்ற செய்தியே மீண்டும் வரும் என்பதில் சந்தேகமில்லை.
விரைவில் பள்ளியை அரசு தத்தெடுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு தரமான வசதிகளுடன் கூடிய கட்டடம் தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
- ப. தாமரைச் செல்வன்