சித்தூரில் தீவிரவாதிகளுடனான மோதலில் படுகாயமடைந்த தமிழக சிறப்பு புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சித்தூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை பால்காரர் வேடமிட்டு திறக்க முயற்சித்த, காவல் ஆய்வாளர் லட்சுமணன் கடுமையாக தாக்கப்பட்டார்.அவரது தலையிலும், முதுகெலும்பிலும் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
சித்தூரில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு லட்சுமணன் இன்று காலை 6.45 மணியளவில் கொண்டு வரப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலையில் பலமாக அடிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லட்சுமணனை காப்பாற்றிய போது திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரும் காயமடைந்தார்.
காவல் ஆய்வாளர் லட்சுமணனின் மனைவி மது மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
- வலசை விவேக்