பியர் வளர மயிர் வேண்டும்


மனிதத் தலைமுடி மற்றும் விலங்குகளின் முடிகள் 'கெராட்டீன்’ என்ற புரதத்தால் ஆனவை. இவற்றில் நைட்ரஜன் சத்தும் அதிகளவில் இருக்கிறது. இந்தச் சத்துக்கள் பயிர்களுக்கு நன்கு பயன்படும். ஆனால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களால், முடிகளை எளிதில் மட்க வைக்க முடியாது. இதனால், முடிகளை நொதிக்க வைத்து, திட மற்றும் திரவ உரமாக மாற்றும் வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார் மதுரை, சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன்.
''தலைமுடியை விளைநிலங்களில் பயன்படுத்தும்போது, மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, தாவரங்களின் வேர் பகுதிகளில் வெப்பநிலையும் சீராக்கப்படுகிறது. அதனால், தாவரங்கள் செழித்து வளர்கின்றன. தோல் தொழிற்சாலைகளில் சேதாரமாகும் தோல் முடிக்கழிவுகளில் இருந்துதான் தாவரங்களுக்கான உணவைத் தயாரித்திருக்கிறேன்.
இதில் தாவரங்களுக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் போன்ற சத்துக்களும், மாங்கனீஸ், மெக்னீசியம், இரும்பு, சல்பர்-குளோரைடு, போரன் மாலிப்பினம்... போன்ற நுண்சத்துக்களும் அதிகளவில் உள்ளன. இந்த உரத்தை... ஏலக்காய், திராட்சை, வாழை போன்ற பயிர்களில் பரிசோதித்ததில், நல்ல பலன்கள் தெரிந்தன. ரசாயனத்தால் உண்டான பாதிப்புகளையும் இவை குறைக்கின்றன'' என்கிறார் ராஜேந்திரன்.

உல்கின் இரண்டாவது மூல விதை சேகரிப்பு மையம்! இந்தியாவில்!

பசுமை நாயகன்  www.thagavalthalam.com

இந்த்யாவின் ஒரு பகுதி லே. இதன் அருகில் உள்ளது சங்க்லா டாப் என்னும் இடம். கடல் மட்டத்திலிருந்து 17000-ம் அடி உயரத்தில் உள்ளது.

இங்கு 5000 வகையான விதைவகைகளை இந்தியா சேகரித்து வைத்து உள்ளது.

100 முதல் 200 ஆண்டுகள் இந்த விதைகளைப் பத்திரமாகப் பாத்காக்க முடியும்

சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகளிருந்து விதைக்ள் நம்மிடம் இல்லாமற் போகும்போது, இந்த மூல விதை சேகரிப்பு மையத்திலிருந்து எடுத்துப் பன்படுத்த முடியும் என்று, டி.ஆஎ.டி.ஓ. செல்ல மூர்த்தி. சொல்லுகின்றார்.