வேலூர் அருகே சாலை விபத்து: 5பேர் பலி


    வேலூர் அருகே கார் மீது பேருந்து மோதியதில் 5 பேர் பலியாகினர். இதில் 2 பேர் பெண்கள். நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து செனைக்கு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிரே சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த முருகேசன், முத்துலெட்சுமி உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயங்களுடன் வாணியம்பாடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காரின் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெங்களூரு சாலையில் கிருஷ்ணகிரி முதல் வேலூர் வரை சாலையை அகலப்படுத்தும்பணி நடைபெற்றுவருகிறது.
இதற்காக 11 இடங்களில் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து மீது கார் மோதி 5 பேர் பலியாக இந்த மாற்றுப்பாதையே காரணம் என புகார் எழுந்துள்ளது.
                                   -இணைய செய்தியாளர் - வலசை விவேக்