வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 9 வயதான 4-ஆம் வகுப்பு மாணவி சடலமாக
மீட்கப்பட்டுள்ளார். ஆண்டியப்பனூரைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள்
காயத்ரி, நேற்று மாலை விளையாடச் செல்வதாக கூறிவிட்டு வெளியே
சென்றிருக்கிறார்.
ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்
அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிறுமியை தேடிப் பார்த்தபோது அருகிலுள்ள
வாழைத்தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இரவு 7.30 மணியளவில் உடலை கைப்பற்றிய குறிஞ்சாலப்பட்டு காவல்துறையினர்
இன்று காலைதான் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கொலைசெய்யப்பட்ட மாணவியின் கன்னத்தில் காயங்கள் இருப்பதால் பாலியல்
வன்கொடுமை முயற்சி நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பாலியல் வன்கொடுமைக்கு சிறுமி ஆளாக்கப்பட்டாரா என்பது பிரேத
பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாணவி கொலை தொடர்பாக 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் குறிஞ்சாலப்பட்டு
காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
-இணைய செய்தியாளர் - வலசை விவேக்