வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி எல்கேஜி சிறுமி உயிரிழந்தார்.
தனியார் பள்ளியில் படித்து வந்த தர்ஷிணி, இன்று மாலை பள்ளி வேனில் வீட்டிற்கு திரும்பும்போது பசுமாத்தூர் என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அப்போது, ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதால் தடுமாறி கீழே விழுந்த சிறுமி தர்ஷிணி, வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பள்ளி வாகனத்தின் ஓட்டூனர், நடந்த சம்பவத்தை எவருக்கும் தெரிவிக்காமல், 15 கி.மீ தூரத்தில் உள்ள பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும், அப்பகுதிக்கு காவல்துறையினரும், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த யாரும் வராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
-இணைய செய்தியாளர் - வலசை விவேக்