லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் சிக்கியது.


    வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் சிக்கியது.
   இந்த சோதனையில், ஆர்.டி.ஓ மோகன் வாகனத்தில் முன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அருகில் இருந்த வாகனத்தில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
   வட்டாரப் போக்குவரத்து வளாகத்தில் உள்ள கழிவறை, ஜன்னல், கதவு, போன்ற இடங்களில் சோதனை செய்ததில், ஆறு லட்சத்து முப்பத்து ஏழாயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணத்தை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக 8 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

         -இணைய செய்தியாளர் - வலசை விவேக்