வேலூர் அருகே மேல்விஷாரத்தில் மின்வெட்டை கண்டித்து மின்சார அலுவலகம் தீ
வைத்து கொளுத்தப்பட்டது. மனிய நேய மக்கள் கட்சி சார்பில், நேற்றிரவு 10
மணிக்கு மேல்விஷாரம் பகுதியில் மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட்டது.
இதன் முடிவில், சாலை மறியல் நடைபெற்றது. அப்போது ஒரு கும்பல்,
மின்சாரம் அலுவலகத்துக்குள் புகுந்து, கணினி, மின்சார மீட்டர் உள்ளிட்ட
பொருட்களை வெளியே எடுத்து வந்து சாலையில் போட்டு தீ வைத்து கொளுத்தியது.
பின்னர், மின்சார அலுவலகத்துக்கு உள்ளே சென்றும் அந்த குடும்பல் தீ
வைத்தது.
இதில், மின்சார அலுவலகம் தீயில் எரிந்தது சேதமடைந்தது. தகவலறிந்து வந்த
தீயணைப்புத் துறையினரின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது. இதைத்
தொடர்ந்து அந்த பகுதியில், போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்
குவிக்கப்பட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள
பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.