சுகாதாரதுறையும் நகராட்சியும் இணைந்து டெங்கு ஒழிப்பு

   வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள வேலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் 20 பேரை தனிவார்டில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுகாதாரதுறையும், நகராட்சியும் இணைந்து ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு செய்தல், மருந்து மற்றும் புகை மூலம் கொசுவை கட்டுப்படுத்துதல், மகளிர் சுய உதவி குழு மூலம் வீட்டுக்கு வீடு கொசு ஒழிக்க தண்ணீரில் மருந்துவிடுதல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவருகிறது. 

   ஆனால் இதே நிலை நீடிக்க செய்வது போல் வாலாஜா அரசு பழயை மருத்துவமனை வாசலில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமற்று கூவம் போலும், கொசு உற்பத்தி மையம் போலும் காணப்படுகிறது. நகாராட்சி விரைந்து இந்த அவல நிலையை சீர்செய்யுமா ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
-இணைய செய்தியாளர் - வலசை விவேக்